-க.கனகராசா-
பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிகாத உணவகங்களுக்கு 96 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிகாத உணவகங்களுக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அறவிட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரசபையினது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய பல்பொருள் வாணிபத்திற்கும் நுகர்வோரிற்கு பழுதடைந்த உணவினை விநியோகம் செய்த உணவக உரிமையாளரிற்கும் உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரினை வெளிச்சுற்றாடலிற்கு அப்புறப்படுத்திய உணவக உரிமையாளரிற்கும் எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்று வெள்ளிக்கிழமை விசாரணையிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பல்பொருள் வாணிபத்தினது முகாமையாளர் மற்றும் இரு உணவக உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 60000, 10000, 26000 என மொத்தமாக 96,000 தண்டப்பணம் நீதிமன்றினால் விதிக்கப்ட்டது.
வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டியமை தொடர்பாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் சிற்றுண்டிச்சாலைக்கு 20000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.


















