ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98 ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு உலகில் 41 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல பயணம் செய்ய முடியும் கடந்த செப்டம்பர் 11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட குறியீட்டில் இலங்கை கடவுசீட்டு 97 ஆவது இடத்தில் இருந்தது.
2024 ஆம் ஆண்டில் 96 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து இடங்கள் முன்னேறி 91 ஆவது இடத்தைப் பிடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தது.
எவ்வாறாயினும், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அங்கிகாரம் சிங்கப்பூருக்கு கடவுச்சீட்டிற்கு கிடைத்துள்ளது. அந்நாட்டு கடவுச்சீட்டை கொண்டு 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
தென் கொரியா 190 இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் ஜப்பான் 190 மூன்றாவது இடத்தில் உள்ளது.
அண்டை நாடான இந்தியாவும் ஐந்து இடங்கள் சரிந்து 85 ஆவது இடத்தில் உள்ளது. இந்திய கடவுச்சீட்டை கொண்டு 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
தெற்காசிய நாடுகளான வங்கதேசம் 100 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 103 ஆவது இடத்திலும் உள்ளன.
ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. அதன் குடிமக்கள் விசா இல்லாமல் 24 நாடுகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


















