இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டப் பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தவிசாளர்களால் இதன்போது ஆரோக்கியமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து எதிர்கால நடவடிக்கைக்கான விடயங்கள் தொடர்பாக ஒவ்வொரு பிரதேச சபைகளின் தலைவர்களிடமிருந்தும் விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளையும், எமது செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க உதவியாக இது அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


















