இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 18 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவானத்தை பெறுவது என்ற அரசாங்கத்தின் இலக்கை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
முந்தைய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும் மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் ஏற்றுமதித்துறை நிலையான வளர்ச்சியைக் காணும் நிலையில் நாடு இப்போது நிலையான மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என அதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி வளர்ச்சியைத் தக்கவைத்து விரிவுபடுத்த புதிய சர்வதேச சந்தைகளை அரசாங்கம் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.















