-சொ.வர்ணன்-
வடமராட்சி கிழக்கு, மாமுனை கிராமத்தில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 7.5 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிறப்பு அதிரடி படையினர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


















