ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று காலை கட்டுபெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டபோது 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அங்குலானை பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, அவரது மனைவியிடமிருந்து மேலும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரின் மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை, அங்குலானை புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 31 மற்றும் 21 வயதுடைய தம்பதியினர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இருவரும் நீண்டகாலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் ஈட்டியுள்ளதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த இருவருக்கும் போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது, இந்த வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணம் மற்றும் அவர்களது வங்கிக் கணக்கு விபரங்கள் தொடர்பில் அவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















