இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயத்தின்போது கச்சதீவு மீட்பு தொடர்பில் பேசி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டு பணிக்குழுவை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக இலங்கைப் பிரதமரிடம் வலியுறுத்துமாறும்,
கச்சத்தீவை மீட்பதோடு, நம் கடற்றொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுப்பது பற்றி கலந்துரையாட வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிக ஊடகங்கள் கூறியுள்ளன.


















