-பா.சதீஸ்-
முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற சோதனையில் 1 கிலோ கஞ்சா மற்றும் இரு வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இந்த சோதனையினை நடத்தியுள்ளனர். சோதனையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா, இரு வாள்கள் மீட்கப்பட்டதுடன், 24 வதான சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு ஏற்கனவே கஞ்சா தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில், முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















