இலங்கையின் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வகையிலும் எதிர்காலத்தில் சட்டரீதியான கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மீனவர்களுக்கான கடற்றொழில் சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, பூநகரி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இளம் கடல்றொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கடற்றொழில் சட்டங்கள் தொடர்பான கருத்துக்களை கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் எஸ்.கனிஸ்ரன் வழங்கியிருந்தார்.


















