-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இக்கரப்பந்தாட்டப் போட்டி தினமும் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகி இரு போட்டிகள் வீதம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் 24 விளையாட்டுக் கழக அணிகள் பங்குபற்றி வருகின்றன.

















