கலவானை, தெல்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொணகலகந்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிக்சை பெற்று வருவதாக கலவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


















