-பா.பிரதீபன்-
காங்கேசன்துறை ஐயனார் ஆலய வடக்கு வீதியில் பொது வழிபாட்டிற்கான சிவனின் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலயத்தில் பாஸ்கரன் காயத்திரியின் முற்றுமுழுதான நிதிப் பங்களிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சன்னிதானத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு , எண்ணெய்க் காப்பு நடைபெற்ற நிலையில், நேற்றுக் காலை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதையடுத்து குடமுழுக்கு இடம்பெற்றதுடன், தொடர்ந்து சிவலிங்கத்திற்கான அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

இதேவேளை ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆலயத்தில் இருந்து ஐயனார் யானை வாகனத்தில் எழுந்தருளி கடலில் தீர்த்தமாட சென்றதுடன், வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.


















