குருணாகலில், மாவத்தகம – கல்பிட்டமுல்ல பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் குருணாகல் – ஹிந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் ஆவார்.
இவர் நீண்ட நாட்களாக காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















