-சி.ஜெகதீஸ்வரன்-
வயிற்று வீக்கம் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த சுந்தரம் விக்னேஸ்வரன் (வயது-46) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
கடந்த புதன்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் அன்று இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.



















