காலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி, பியடிகமவில் உள்ள சுதர்சனராமய விகாரையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு மையத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்த ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு மாதக் குழந்தை உட்பட நான்கு பொதுமக்கள், 2ஆவது தன்னார்வ கெமுனு கண்காணிப்புப் படையினரால் பாதுகாப்பாக ஒரு பாதுகாப்பு மையத்திற்கு வெளியேற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 24 மணி நேரமும் தேவையான உதவிகளை வழங்க உறுதிபூண்டுள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.


















