-சி.ஜெகதீஸ்வரன்-
கெருடாவில் – பண்டிக்கண்டன் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் கயிறு கட்டி நீந்திய இளைஞர் ஒருவர் கயிறு அறுந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சத்திரந்தை, கம்பர்மலையைச் சேர்ந்த நிறைஞ்சன் நிறக்சன் (வயது-18) என்ற இளைஞர் ஆவார். மேற்படி இளைஞர் ஐந்து நண்பர்களுடன் நேற்று மதியம் மேற்படி கிணற்றில் கயிறு கட்டி நீந்தியுள்ளார். கயிறு அறுந்து நீரில் மூழ்கிய நிலையில் ஊரவர்களால் மீட்க்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மரணம் தொடர்பி ல் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை வல்வெட்டித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர். இதேவேளை தோட்டக் கிணறுகள் ஆபத்தானவை எனவும் அவற்றில் இறங்கி நீச்சல் அடிக்க வேண்டாம் என மரண விசாரணை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.


















