-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி – கோரக்கன்கட்டு பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் முறைகேடு இடம்பெற்றதாக கருத்து தெரிவித்த நபரடைய வீட்டின் மீதும், குடும்பத்தினர் மீதும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தினர்.
கோரக்கன்கட்டு கிராமிய வீதி ஒன்றை புனரமைப்பு செய்வதற்கு அளுநரினால் உள்ளூராட்சி திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியாகும். அந்த நிதியை பயன்படுத்தி கிராமிய வீதியிலிருந்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வீட்டுக்கு செல்லும் வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் அவருடைய உறவினர்களும் இணைந்து தட்டிக் கேட்டவரின் வீட்டின் மீதும் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.


















