உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலய நலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாநன் இளங்குமரனால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் ஒரு வாரத்திற்கு கறுப்புப் பட்டி அணிந்து தங்களது கடமைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையினரின் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொதுமக்களுக்கான மனித நேயப் பணிகளை வழங்க வேண்டியதன் அவசியம் காரணமாக ஒருவாரத்திற்கு கறுப்புப் பட்டி அணிந்து பணிக்கு செல்வதாகவும் நியாயமான, சட்டரீதியான தீர்வுகள் கிடைக்காதவிடத்து மேலதிக செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


















