கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சுண்டிக்குளம் சாலைப் பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற 5 கடற்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போயிருந்தனர்.
வெள்ள நீரை கடலுக்குள் விடும் முயற்சியில் தொடுவாய் வெட்டுவதற்காக சென்ற சாலை கடற்படை முகாமை சேர்ந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.




















