-க.சபேஷன்-
கிளிநொச்சி நகர் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்த்தரிப்பது தொடர்பிலும், வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்துவது தொடர்பிலும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. இதன்போது நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மேம்படுத்தவும் 4 வழிப்பாதையைத் தேவையான இடங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பிலும், பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யப் பாலங்கள் மற்றும் வீதிச் சமிஞ்சை விளக்குகளை அமைப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
அதேபோல் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்களில் நிலவும் தாமதங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்குத் தடையாக உள்ள காரணிகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



















