-க.சபேக்ஷன்-
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர் பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 22 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவருடைய சமூகவலைத்தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பளை பிரதேசத்தில் இராணுவப் பயன்பாட்டிலிருந்த தனியார் காணி உத்தியோகபூர்வமாக பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இராணுவவசம் இருக்கும் மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதே நமது எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது பூர்வீக நிலங்களை இழந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆவலைத் நாம் தெளிவாகப் பிரதிபலிக்கிறோம் என கூறியுள்ளார்.


















