கிளிநொச்சி – வலைப்பாடு கடற்பரப்பில் சிலின்டர்களை பயன்படுத்தி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 13 மீனவர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
நேற்றுமுன்தினம் அதிகாலை வலைப்பாடு கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின்போது 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 1108 கடலட்டைகள், 4 டிங்கி படகுகள், சுழியோடுவதற்கான உபகரணங்களை கைப்பற்றியுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் 29 முதல் 67 வயதுக்குட்பட்ட பள்ளிமுனை, தொட்டவேளி, சவுத்பார் மற்றும் எழுத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.


















