வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு எம்.பிக்கள், உள்ளுராட்சி மன்றங்களினுடைய பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றம் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின்போது கொழும்பிலிருந்து வருகைதரவுள்ள மாகாவலி அதிகாரசபை அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக விளக்கக் காட்சிகள் அடங்கிய தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கவுள்ளது.















