காலி – பத்தேகம மஹாலியனகேவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பத்தேகம, சந்தரவள பகுதி யைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டில் தனியாக வசித்துவந்த குறித்த பெண், பல நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ள நிலையில் வீட்டில் விளக்குகள் எரிந்ததால் சந்தேகம் இருப்பதாக பத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பத்தேகம பொலிஸார் குறித்த வீட்டை சோதனை செய்தபோது, குறித்த பெண் வீட்டின் தரையில் நிர்வாணமாகக் கிடந்துள்ளதுடன், அவரது உடலிலிருந்து இரத்தம் கசிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















