.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 10மணி வரை பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைந்து மேற்கு – வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை 05N 18N மற்றும் 80E-95E எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளுக்கு கடற்படையினர் மற்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடல் பகுதிகளில் செயல்படும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் நாளை சனிக்கிழமைக்கு முன்னர் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் கிழக்கில் வங்காள ஆழ்கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகள் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் விரிவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


















