பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் அதே தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கருப்பன் குண்டு (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது கால்நடைகளுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியில் உள்ள ஒரு பெரிய மரத்தில் கட்டப்பட்டிருந்த கதண்டு குளவி கூண்டை பறவை தாக்கியதால் கிளர்ந்தெழுந்த குளவிகள் அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.


















