இலங்கைக்கு விமான சேவையை வழங்கும் உலகின் மிகப்பழமையான சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான குவைத் எயார் வேஸ் நான்கு வருடங்களின் பின் கொழும்புக்கான தமது நேரடி விமான சேவையை திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் எயார் வேஸ், முதன்முதலில் 1978ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்தது.இவ்வாறான நிலையில் ;குவைத் எயார் வேஸ், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகள் கூட்டுச் சேவையில் ஈடுபட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே நேரடி விமான சேவையை மீள ஆரம்பிக்கும் வகையில் திங்கட்கிழமை குவைத் எயார் வேஸின் முதலாவது விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்து.
இதற்கு வரவேற்பு அளிக்குமுகமாக விமானம் தரையிரங்கி வருகையில் நீர்த்தாரை பீச்சி, வரவேற்பளிக்கப்பட்டதுடன் விமானப் பயணிகளை வரவேற்குமுகமாக கண்டிய நடனம் இடம்பெற்றதுடன் சிலோன் தேயிலை பரிசும் இலங்கை சுற்றுலாத்துறையினரால் வழங்கப்பட்டது.


















