-த.சுபேசன்-
யாழ்.கொடிகாமம் – கெற்பேலிப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கெற்பேலி கிராமத்திலுள்ள இரு கோஷ்டிகளுக்கிடையில் கத்தி, கோடரி மற்றும் மண்வெட்டி கொண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 5 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


















