முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை காலை முன்னிலையாகியுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹெலியவும் அவரது மனைவியும் மகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

















