-பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க-
-செ.சுமந்தன்-
கேப்பாபிலவில் விடுவிக்கப்படாதுள்ள பகுதியில் காணி ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணிககைள பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்குமென முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலிசமரசிங்க தெரிவித்துள்ளார்.
தமது காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்துக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநர், து.ரவிகரன் எம்.பி, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலிசமரசிங்க மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மனுகளை கையளித்திருந்தனர்.
மனுவினை பெற்றுக் கொண்ட பின் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
கேப்பாபிலவு மக்கள் தொடர்ச்சியாக காணியினை விடுவிக்கசொல்லி கோரி வருகின்றனர். இராணுவத்தினால் ஒருபகுதி காணிவிடுவிக்கப்பட்டாலும் மற்றுமொரு பகுதி விடுவிக்கப்படாமல் காணப்படுகின்றது.
கேப்பாபிலவில் காணி ஆவணங்கள் உள்ள மக்களுக்கான காணிககைள பெற்றுக்கொடுத்து அவர்களின் சுமூகமான வாழ்வினை ஏற்படுத்த இந்த அரசாங்கம் முயற்சிக்கும் என்றார்.


















