குளியாப்பிட்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்றுமுன்தினம் பிற்பகல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் எரேபொல சிறிபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் ஆவார்.
இவர் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த கைதியின் சடலம் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















