-வி.சரவணன்-
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் சட்டவிரோத அனுமதியுடன் உப்பளம் அமைக்கும் பணிகளை உடன் நிறுத்தி விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்துவதுடன்இ குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு விவசாயம்இ கால்நடை வளங்கள்இ நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த அறிவுறுத்தியுள்ளார்.
வவுனியா மாவட்டசெயலகத்தில் நேற்று இடம்பெற்ற விவசாயம்இ கால்நடை வளங்கள்இ நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளி என்னுமிடத்தில் அப்பாத்துரை துரைசாமி, கதிரேசு நாகரட்ணம், குமாரசாமி கணபதிப்பிள்ளை, கதிரேசு கந்தசாமி என்பவர்களுக்குரிய தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம்
மற்றும் மகாவலி அதிகாரசபை என்பன சட்டவிரோதமாக அனுமதிகளை வழங்கியுள்ளன. அங்கு தமிழ் மக்களுக்குரிய அந்த காணிகளில் உப்பளம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சியால் காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கும், சட்டவிரோத அனுமதியுடன் அங்கு உப்பளம் அமைக்க முயற்சித்த வர்களுக்குமிடையில் கடந்த 27.02.2026அன்று முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமும் அப்பகுதி மக்களால் நேரடியாகச் சென்று முறைமயீடும் செய்யப்பட்டது. அந்தக்காணிகள் தனியார் காணிகள் என்பதற்கான ஆவணங்களும் என்னிடமுள்ளன. சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களும் என்னிடமுண்டு.
இந்த ஆதாரங்களை அமைச்சரிடம் கையளிப்பதற்கு தயாராக இருக்கின்றேன். இந்த அரசின் ஆட்சியில் கூட இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்றார்.
இந்நிலையில் அமைச்சர் கே.டி.லால்காந்த இதன்போது மகாவலி அதிகாரசபையிடம் இவ்விடயம் தொடர்பில் விளக்கங்கோரினார். அதற்கமைய மகாவலி அதிகாரசபையின் அதிகாரி இதன்போது பதிலளிக்கையில், உப்பளம் அமைக்கும் செயற்பாட்டிற்கு உரியவாறு அனுமதிகள் பெறப்பட்டதாகவும், வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். அத்தோடு அந்தக்காணிகள் தனியார் காணிகள் என்பது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி,
அக்காணிகள் காணிகள் தனியார் காணிகள் எனில், அதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடளிக்கமுடியும் எனவும் தெரிவித்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இடையிட்டுக் கருத்துத் தெரிவிக்கையில், மகாவலி அதிகாரசபையிடம் நாமும், எமது தமிழ் மக்களும் வருகைதர வேண்டிய அவசியமில்லை. எமது மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கும், முறைப்பாடுகளைப் பதிவுசெய்யவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குத்திற்குத்தான் செல்வார்கள். மக்களுக்கு மாவட்ட செயலகமே பொறுப்பாகும்.
அவ்வாறிருக்கையில் நீங்கள் எமது தமிழ் மக்களின் காணிகளை அத்துமீறி அபகரித்துள்ளீர்கள். ஓரு போதும் மகாவலி அதிகாரசபைக்கு எமது தமிழ் மக்கள் வருகைதர மாட்டார்கள். அங்கு வனஜீவராசிகள் திணைக்களம்இ மகாவலி அதிகாரசபை என்பன தமக்கு அனுமதிகளை வழங்கி யுள்ளதாகத் தெரிவித்து மரங்களை வெட்டி குடில்கள் அமைக்கும் சட்டவிரோத செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன என சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், இந்த உப்பளம் அமைப்பதற்கு கடந்த 2023ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கூறியதைப்போல, அந்த உப்பளம் அமைக்கப்படுகின்ற பகுதியில் ஒரு தனியார் காணி இருப்பதாக உரிய ஆவணங்களு டன் வருகைதந்து அந்த ஊர்மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர். அதில் இரண்டு முக்கிய விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக மக்களால் தனியார்காணி என முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அந்த தனியார் காணிகளுக்குள்ளேதான் அந்த உப்பளம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயவேண்டும். உப்பளம் அமைக்கப்படுவதால் தமக்குப் பாதிப்பு இருப்பதாக அருகே உள்ள களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களாலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதற்குரிய அனுமதியை சுற்றாடல் அமைச்சு வழங்கியுள்ளது. எனவே முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் இதுதொடர்பில் மகாவலி அதிகாரசபைக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்படும்.
காணியை உறுதிப்படுத்திய பிற்பாடு இந்த உப்பளம் அமைக்கும் திட்டத்தை மேற்கொள்வதே பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன் என கூறினார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், நிலங்கள் அனைத்தையும் பறித்தெடுத்தால் எமது மக்கள் எங்கு செல்வது.
இந்த விடயத்தில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தனியார் காணிகளை அத்துமீறி ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனவும்இ இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலாளருக்கு பொறுப்பளிக்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் லால் காந்தவிடம் வலியுறுத்தினார். விடயத்தை ஆராய்வதற்காக மாவட்டசெயலாளரிடம் பாரப்படுத்துவதாக அமைச்சர் கே.டி.லால் காந்த பதிலளித்தார்.


















