கொழும்பு கொட்டாஞ்சேனையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக் கொலை தொடர்பான விசாரணையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 18 வயதான துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த துப்பாக்கித்தாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தமக்குக் கொலைக்கான துப்பாக்கியை வழங்கிய இருவர் குறித்து அவர், தகவல்களை வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே கம்பஹா வத்தளை பிரதேசத்தின் இரு வேறு இடங்களிலிருந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


















