அரச வங்கிகளை தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு – லேக் ஹவுஸ் சுற்றுவட்டாரத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.


















