2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த அறிவிப்பு பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் 2025 ஆண்டு ஆம் க.பொ .த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது எதிர்வரும் 9 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையுமென்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் அது நீடிக்கப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் வினவ வேண்டுமானால்இ பின்வரும் தொலைபேசி இக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208/ 0112-784537/ 0112-785922.
அத்துடன் 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



















