மாத்தளை, கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
83 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண் சந்தேக நபர் வத்தளையை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும், பெண் சந்தேக நபர் கணேமுல்லயை சேர்ந்த 62 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















