-கடுமையாக சாடும் ரவிகரன் எம்.பி-
வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் நடக்கும் சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துவதற்கு அனுர அரசாங்கத்திற்கு வக்கில்லை என்று தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற சட்டவிரோத தடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்துக் கடற்பரப்புக்களையும் ஆக்கிரமித்துள்ளன.
இது தொடர்பில் பல தடவைகள் உரிய தரப்பினர்களுக்கும், பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் எந்த பயனும் இதுவரை கிடைக்கவில்லை.
குறிப்பாக கடற்றொழில் அமைச்சருக்கு இந்த விடயங்கள் தொடர்பில் பலமுறை எடுத்துக் கூறியும் அவரும் சட்டவிரோத செயற்பாடுகளை இல்லாதொழிக்க முன்வரவில்லை என்றார்.


















