-சு.பாஸ்கரன்-, -கஜிந்தன்-
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் முகமான கலந்துரையாடலொன்று நேற்று கண்டாவளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை நடைபெற்றது.
இதில்; கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிளிநொச்சி மாவட்டத்தின் இராணுவ, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வனவளத் திணைக்களத்தினர், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், புவிச்சரிதவியல் மற்றும் கனியவளத் திணைக்கள அதிகாரிகள், கிராமமட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் முகமாக விரைவாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.


















