-ஞானத்தமிழ்-
சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து நடத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 4 ஆம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு கலாசார அதிகாரசபைத் தலைவரும் பிரதேச செயலாளருமான கு. பிரபாகரமூர்த்தி தலைமையில் சீரணி மஹால் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்தியர் சி. சிவன்சுதன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் ஈ.குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், சிற்ப, சித்திரக் கலைஞர் கலாபூஷணம் சு.பத்மநாதன், நாடகக் கலைஞர் கலாபூஷணம் செ. உதயச்சந்திரன் மற்றும் வர்த்தகர் அ.சூரியகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கலை இலக்கிய நிகழ்வுகளுடன் எழுத்தாளர் கலாபூஷணம் கே.ஆர். டேவிட் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கலை இலக்கிய விழாவில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான கௌரவிப்பு, பிரதேச மட்ட தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு ஆகிய நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.


















