மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சந்தை பகுதிக்கு மூதூர் சுகாதார வைத்திய பணிமனை தலைமையிலான சுகாதார அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் செய்து பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

சுகாதார நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் நேற்று விஜயம் மேற்கொணடனர்.

அதன்போது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார சீர்கேடுகளை கண்டறிந்ததுடன் இந்த சந்தை பகுதி மூதூர் பிரதேச சபைக்கு சொந்தமானதாகும்.
இந்நிலையில் மூதூர் சந்தையை சீர்செய்ய மூதூர் பிரதேச சபைக்கு எழுத்து மூலமான மனுவை இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்க உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இரண்டு வாரங்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சந்தை நடைபெறுவதை நிறுத்தும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

















