-க.சபேஷன்-
வடக்கில் இருந்து சபரிமலை செல்வதற்கான பயண ஒழுங்குகள், போக்குவரத்துகளை இலகுபடுத்தி தருமாறு யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.-
வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தின் ஏற்பாட்டில் அதன் நிர்வாகத்தினர் நேற்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் தூதரக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.
இச் சந்திப்புத் தொடர்பில் வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தின் தலைவர் தரணீஸ்வர குருசுவாமி கருத்து தெரிவிக்கையில்:-
தற்போதைய அரசாங்கம் சபரிமலை யாத்திரிகர்கள் பயணத்தை புனித பயணமாக அறிவித்துள்ளார்கள். இதற்கான அரசாங்கத்திற்கு நன்றி கூறுகின்றோம்.
இந்தியாவிற்கான சபரிமலை யாத்திரிகர் பயணம் செய்வதற்கான வீசா அனுமதி பெறுதல் மற்றும் நவம்பர்மாதம் என்பதால் காலநிலையில் மாற்றங்கள் காரணமாக சாமிமார்கள் பயணம் செய்வதில் பல சவால்களை எதிர்கொள்வதால் விமான எண்ணிக்கையை குறித்த மாத்த்தில் அதிகரிக்குமாறு இந்திய துணைத் தூதரகத்திடம் கோரியுள்ளோம்.
மேலும் காங்கேசன்தூறை நாகப்படினத்திற்கான் கப்பல் சேவையில் கூடிய எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்யக்கூடிய பெரிய கப்பலை போக்குவரத்தில் ஈடுபடவைக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளோம்.
இதுமட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கில் சைவ மக்கள் பல்வேறுவகையான இன்னல்களை சந்தித்துவருவதால் சைவசமய புனித்த்தை பேணுவதற்கு உரிய ஒருங்குகளை செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளோம். குறித்தகோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த அதிகாரிகள் இவைதொடர்பில் விரைவில் சாதகமன முடிவுகளை பொற்றுத்தருவதாக வாக்குறதியளித்துள்ளார்கள் என்றார்.


















