கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம் எனவும், அவை பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மூலிகை மருந்து ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்து ஆராய்ச்சி தகவல்களும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மட்டுமே பகிரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்தின் மூலிகை மருந்து தொடர்பான ஆய்வுகள் இதுவரை மருத்துவ பரிசோதனை, மருந்து பதிவு நிலைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் நோயாளிகள் தகுதியான வைத்தியசர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட மருந்துகளையே பயன்படுத்த வேண்டும் எனவும் கொமும்பு பல்கலைக்கழகம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.


















