இலங்கையில் பல நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் இணைய வழி பாலியல் வர்த்தகத்திற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் மறைமுகமாக வர்த்தகப் பொருட்களை சந்தைப்படுத்துவது போன்ற பக்கங்களை ஆரம்பித்து விட்டு பின்பு பாலியல் சேவைகளை வழங்கும் தொடர்புகளை உள்பெட்டியின் ஊடாக இதனோடு சம்பந்தப்பட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலியல் தொழிலில் 18 வயது முதல் 27 வயது வரையான பெண்கள் ஈடுபடுத்தப்படுவதுடன், சிலர் தன்னிச்சையாகவே இதில் ஈடுபட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மசாஜ் சேவைகள் என்ற பெயரிலும் இவ்வாறான பாலியல் தொழில்கள் முன்னெடுக்கப்படுவதாக சைபர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வர்த்தகத்தை முன்னெடுப்பது அவர்களுக்கு செலவு குறைவாகவும் காணப்படுகின்றது.

















