-தமிழ்ச்செல்வன்-
கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய தரம் 7 மாணவன் சத்தீஸ்வரன் டினோஐன் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற அகில இலங்கை தேசியமட்ட
சமூக விஞ்ஞான போட்டியில் முதலாம் இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்தவாரம் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி மேற்படி பாடசாலையைச் சேர்ந்த இம்மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றார்.


















