மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந்த சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.
சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சிரமதானத்தில் கலந்து கொண்டோருக்கு கூழ் காய்ச்சி பரிமாறப்பட்டிருந்தது.


















