-பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு-
வவுனியா – கணேசபுரம் 7 ஆம் ஒழுங்கையை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கணேசபுரத்தை சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவனான தி.லதுர்ஷன் (வயது14) என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் சிகை அலங்கார நிலையத்திற்கு செல்வதாக கூறி தயாரிடமிருந்து பணம் பெற்றுச் சென்ற சிறுவன் மாலை ஆகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களின் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.
சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தாயின் தொலைபேசி இலக்கமான
0768644938, 0772432175 ஆகியவற்றுக்கு அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


















