சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பெத்திகொல்லெவ நீதவான் நிமேஷா பட்டபெதிகே உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பஸ் சாரதி மீரிகம பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பதவிய பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை
நடவடிக்கையின் போதே சந்தேக நபரான பஸ் சாரதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் கைது செய்யப்பட்ட பஸ் சாரதி கெப்பெத்திகொல்லெவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.


















