-த.சுபேசன்-
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் தலைவராக வர்த்தகரும், சமூக சேவகருமான கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி சிவன்கோயில் வீதியில் அமைந்துள்ள தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
தலைவராக தொழிலதிபர் அகிலன் முத்துக்குமாரசாமி, செயலாளராக முத்துலிங்கம் கோகுலன், பொருளாளராக மருதை உதயகுமார் ஆகியோருடன் 10 பேர் நிர்வாகசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


















