சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் வாகன கொள்வனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய 44 ஆசனங்கள் அடங்கிய 30 பஸ் வண்டிகள், 30 ஆசனங்கள் அடங்கிய 10 பஸ் வண்டிகள், 10 வேன்கள், 5 வாடகை பௌசர்கள் மற்றும் 3 டிரெக்டர்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கென விலைமனு கோரப்பட்டதுடன் 8 பேரினால் விலைமனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளின் அன்றாட பணிகள் மற்றும் கைதிகளின் நலன்கள் சார்ந்த விடயங்களிலும் இந்த வாகன கொள்வனவு அத்தியாவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


















