-செ.சுமந்தன்-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த கடந்த 26 ஆம் திகதி சிறையில் உயிரிழந்தார்.
கொழும்பில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றின் கணக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் கடந்த 10.12.2025 குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையின் போது அவர் தாக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் சிறைச்சாலையில் அவர் 26 ஆம் திகதி உயிரிழந்தார்.


















